Backya

Backya
Raja

சனி, 17 ஜூலை, 2010

மனிதன் படைத்த படைப்புகளில் மிகபெரிய பிரம்மாண்டமான படைப்பு !





2.பணம்
   ஒரு காலத்தில் மனிதன் ஒரு பொருளுக்கு ஈடாக மற்றொரு பொருளையே 
மாற்றிக்கொண்டான், பிந்நாளிள் அந்த பறிமாற்றங்கள் பொறுத்தப்படாமல் 
போனதால் மனிதன் சிந்தனையை கூர்மையாக்கி எல்லா 
பறிமாற்றங்களுக்கும் பொதுவானதாகவும் அந்தந்த பொருளின் மதிப்பிற்கு 
பொறுத்தமானதாகவும் படைக்கப்பட்டதே பணம்  என்ற ஒரு பொருள்..  இது 
அனைவரும் அறிந்த ஒன்றே...  ஆனால் இன்று அந்த பணம் மனிதனை 
ஆட்டிபடைத்துகொண்டிறிக்கின்றது... இது எல்லோரும் அனுபவிக்கின்ற 
ஒன்று...

   இபோது மனித இனம் பணம் என்னும் பாதாள சிறையில்.
           
     இனி இதிலிருந்து மனிதனுக்கு விடுதலை என்பதே கிடையாது என்பது 
எனது திண்ணம்....

உங்களுக்கு...?

செவ்வாய், 29 ஜூன், 2010

மனிதன் படைத்த படைப்புகளில் மிகபெரிய பிரம்மாண்டமான படைப்பு !

படைப்புகள் பற்றி சில...!!!!!!!!




1 . கடவுள்!

நெருப்பையும், மற்ற இயற்கை சீற்றங்களையும் கண்டு பயந்த கற்கால மனிதர்கள் அவற்றை வணங்கத்தொடங்கினார்கள்... பின்னர் மெல்ல வளர்ந்தவர்கள் அந்த இயற்கை அச்சுறுத்தலில் இருந்து தன்னை காத்துக்கொள்ள மனிதனை காப்பது கடவுள்!!!!!! என்று கூறி அதற்கு நாமம் சூட்டி! உருவமும் கொடுத்து! இறைவனைப் படைத்து! அதன்மீது

அபார நம்பிக்கையும் கொண்டார்கள்! பின்நாளில்.. அந்த அபார நம்பிக்கையே போதையாகி ஒன்றை சிதைத்து ஓராயிரமாக்கி தன்னிலை மறந்தார்கள் அந்தகால மனிதர்கள்! இந்நிலையில் விழித்த சில (உடல் வருத்தி உழைக்க விரும்பாத) விஷமிகள் தானும் பிழைத்து தன் சந்ததியினரும் இவ்வுலகம் உய்யும் வரை உழைக்காமல் பிழைக்க சிதைந்ததை சாதகமாக்கி பல சம்பிறதாயங்களையும், சாங்கியங்களையும் உருவாக்கியும் பல வழிபாட்டு முறைகளை உட்புகுத்தியும் கடவுள்பிழைப்பு !!!! நடத்துகிறார்கள் இன்றளவும்......

இதில் ஓர் வேதனை என்னவென்றால் மனிதனின் படைப்பான கடவுள் தான் மனிதனை படைத்ததாகவும், இயக்குவதகவும், அழிப்பதாகவும் நம்பவைத்துவிட்டார்கள்.



சிந்தனை செய் மனிதா!!!

இந்த மன்னும், மனிதர்களும், மற்றவைகளும் இயற்கையின் உருவாக்கம்தான்!!!!!!!   இதில் நான் சொன்னதும் ரெத்தினச்சுருக்கம்....


ஆனால் மனிதனின் படைப்புகளோ மனிதனையே விழுங்கிகொண்டிருகின்றது.. அவற்றில் மேலும்மொரு பிரம்மாண்ட படைப்பு பற்றி வரும் பதிவில் காண்போம்............

சனி, 26 ஜூன், 2010

ரசனையோடு..


அழகில்லாதவை கூட


ரசனையோடு ரசிகும்போழுது

அழகாக மாறிவிடும் ,


அறிவில்லாதவர்களை கூட

சரியான நேரத்தில் தூண்டிவிடுங்கள்

அறிவு சுடராக ஒளி தருவர் ,


தோல்வியை கூட வேள்வியாக

எடுத்துக்கொண்டால்

வெற்றி வீடுதேடி வரும் ,


காதலை கூட

கண்ணியத்தோடு செய்யுங்க l..

கடுமையான எதிர்ப்பிலும்

காதல் வெல்லும் ,


எதிரியைக் கூட

நண்பராக நினையுங்க l

விரோதம் விட்டு விலகிவிடும் .. .

இனி எப்படி நேசிப்பேன் நான் இந்தியாவை..?


                தாய்  நாட்டை மிகவும் நேசிப்பவர்களில் நானும் ஒருவன் அன்று...!

தமிழனின் நிலை கண்டு கலங்கியநெஞ்சம் உடையவர்களில் நானும் ஒருவன் இன்று...!

                   நான் கண்ட நிலைகளில் எல்லாம் நமது இந்தியத்தாய்நாடானது எம் 

தமிழினத்தை அழித்தும், தனித்தும், கண்டுகொல்லாமலும் விட்டிருகின்றது...

அழித்தது.... எமது தொப்புல்கொடி உறவுகளை..!

தனித்தது.... எமது மாநிலத்தை..!

கண்டுகொல்லாமல் விட்டது... எமது மீனவர்களை..!
       

                             சொல்லுங்கள் இனி எப்படி நேசிப்பேன் நான் இந்தியாவை..?





நான் கண்ட நிலைகள் வரும்......

செவ்வாய், 22 ஜூன், 2010

வணக்கம் நான் பாக்யா சுருக்கமா பாக்யராஜ் - புது பிளாக்கர் ...




வணக்கம், நான் பாக்யா சுருக்கமா பாக்யராஜ் ... இப்பதான் பிளாக் எழுத வந்திருக்கேன்.. எல்லோரையும் படிச்சிட்டு இருக்கேன் திடீர்ன்னு நாமளும் பிளாக்கர் ஆனா என்னனுன்னு தோனுச்சு..( உங்க தல விதி) .. அதான் ஆரம்பம்...

ஊருல படிச்சு முடிச்சுட்டு விவசாயமும் பாக்காம சும்மா திரியிற ஆளுல நானும் ஒருவன்.. இப்பிடி இருந்தா எவ்வளவு அர்ச்சனை வருன்னு உங்களுக்கும் தெரியும்.. என் வீட்டு சிறுசு முதல் ஊர்பெரிசு வரை அட்வைஸ் பண்ணி கொல்லும்..
இடையில் ஒருமுறை துபாய்க்கும், ஒருமுறை மலேசியாவுக்கும் வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு என்ஜாய் பண்ணிட்டு வந்தது வேறு விஷயம்..

சரி சொந்தமா பிசினஸ் பன்னுவோன்னு ஆரம்பிச்சேன்.. அதையும் ஊத்தி மூடியாச்சு... அப்ப வெட்டி பசங்க என்ன பண்ணனும்.. நீங்கல்லாம் என்ன பண்றீங்களோ அதேதான் ...

பிளாக்கர் ஆயிட்டேன் ... ( அண்ணே மொறைக்காதீங்க) ..

இப்ப நானும் உங்கள்ள ஒருத்தன் ஆயிட்டதால..( ஒன்னுக்குள்ள ஒன்னு .. மண்ணுக்குள்ள மண்ணு )...

உங்கள் மேலான ஆதரவை தந்து ஆதரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் ...